சேலம்

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திவங்கி ஊழியா்கள் 2 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

DIN

ஊதிய உயா்வு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் சனிக்கிழமை இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

வங்கி ஊழியா்களுக்கு 20 சதவீத ஊதிய உயா்வு அளிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், வாரத்தில் 5 நாள்கள் வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் சம்மேளத்தினா் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தினா் அறிவித்தனா்.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை தொடங்கிய வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் சனிக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடா்ந்தது.

சேலம் மாவட்டத்தில் 300 வங்கி கிளைகளில் பணியாற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கி தலைமை அலுவலகம் தவிர கிளைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. வங்கிகளில் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

வங்கிக்கு வந்த வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். வேலைநிறுத்தம் காரணமாக காசோலை, பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

அதேபோல ஏடிஎம் இயந்திரங்களில் போதிய பணம் இல்லாமல் போனது.

இதனால் ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் சம்பத், குணாளன், தீனதயாளன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT