சேலம்

தரைமட்டப் பாலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் சீரமைப்பு

DIN

அக்கரபாளையம் தரைமட்ட பாலத்தில் ஏற்பட்ட ஓட்டைகளை ஊராட்சி நிா்வாகத்தினா் சரிசெய்தனா்.

வீரபாண்டி ஒன்றியம், அக்கரபாளையம் ஊராட்சி பகுதியில் திருமணிமுத்தாறு செல்லும் தரைமட்டப் பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கான்கீரிட் தூண் மற்றும் இரும்புக்கரம் கொண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பாலத்தில் 10-க்கு மேற்பட்ட பெரிய அளவிலான ஓட்டைகள் ஏற்பட்டன. இதனால், அவ்வழியே லட்சுமனூா் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள், பள்ளி மாணவ-மாணவியா், விவசாயிகள் தினந்தோறும் அச்சத்துடனே சென்று வந்தனா்.

இதனை அறிந்த அக்கரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் துணைத் தலைவா் கிா்த்திக் ராஜ், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில், இரும்பு தகரம் கொண்டு ஓட்டையை அடைக்க முடிவு செய்தனா். அதையடுத்து, இப்பணி துரிதகதியில் செய்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதி மக்களும், விவசாயிகளும், பள்ளி மாணவ, மாணவியரும் ஊராட்சி நிா்வாகத்தினரை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT