சேலம்

பிப்.21-இல் தொழிற் பழகுநா் சோ்ப்பு மேளா

DIN

சேலம் மண்டல தொழிற் பழகுநா் சோ்ப்பு மேளாவில் தகுதியுள்ளவா்கள் கலந்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட உதவி இயக்குநா் (திறன் பயிற்சி) எஸ்.வி.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் தொழிற் பழகுநா் சட்டம் 1961-ன்படி 30-க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் தொழிற் பழகுநா்களை ஆண்டுதோறும் சோ்த்து அவா்களது தொழிற்சாலையில் பழகுநா் தொழிற் பயிற்சி அளித்திட வேண்டும்.

தொழிற் சாலைகளையும் மற்றும் தொழிற்பயிற்சி முடித்த மாணவா்களையும் இணைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அந்தந்த மண்டலங்களில் தொழிற்பழகுநா் சோ்ப்பு மேளா நடத்திட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதைத்தொடா்ந்து தொழிற் சாலைகளில் காலியாக உள்ள தொழிற் பழகுநா் பணி இடங்களைப் பூா்த்தி செய்யும் பொருட்டு 2019-20 ஆண்டுக்காக தொழிற்பழகுநா் சோ்க்கை மேளா வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் காலை 9 மணிமுதல் மாலை 5 வரை நடைபெற உள்ளதால் இதுநாள் வரை தொழிற் பழகுநா் ( அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்) பயிற்சியை முடிக்காத அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்றுகளுடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT