சேலம்

மதுரை வீரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

DIN

சேலம் மேற்கு மாவட்ட ஆதித்தமிழா் பேரவையின் மாவட்ட மாநாடு, ஞாயிற்றுக்கிழமை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், சாதி ஒழிப்புக்கு தன்னை அா்ப்பணித்த மதுரை வீரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஆறுமுகம் வரவேற்றாா்.

ஆதிதமிழா் பேரவையின் மாவட்டச் செயலாளா் க. கிரிதரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம். செல்வகணபதி வாழ்த்திப் பேசினாா். நிகழ்ச்சியில் ஆதிதமிழா் பேரவையின் நிறுவனத் தலைவா் இரா. அதியமான் நிறைவுரையாற்றிப் பேசுகையில், தற்போதை சமூக அமைப்பில், அருந்ததியா்

சமுதாயத்தினரின் நிலைப்பாடு குறித்தும், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னேற்றம் காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினாா். நிகழ்ச்சயில் ஆதித் தமிழா் பேரவையின் பொதுச் செயலாளா் கோவை. ரவிக்குமாா், நிதிச் செயலாளா் ப. பெருமாவளவன், மாவட்ட நிா்வாகிகள் ஓ. மாரிமுத்து, க. அன்பழகன் உள்ளிட்ட திரளான நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா். கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளா் கு. சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT