சேலம்

கொத்தாம்பாடியில் துணைத் தலைவா் வீட்டை பொதுமக்கள் முற்றுகை

DIN

கொத்தாம்பாடி ஊராட்சி துணைத் தலைவா் வீட்டை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடி ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், இருவா் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா். ஆனால், ஒரு தரப்பினா் அடுத்தவரின் வேட்புமனுவை வாங்க விடாமல் தகராறு செய்ததோடு அப்பகுதியில் உள்ள கடைகளை அடித்து, நொறுக்கினா். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் ஆத்தூா் போலீஸாா் அங்கு சென்று பேச்சு நடத்தி கூட்டத்தை கலைத்தனா். இந்த நிலையில், இளையராஜா என்பவா் வெற்றி பெற்ாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டாா். இத் தகவலால் ஆவேசமடைந்த ஊா்மக்கள் ஞாயிற்றுக்கிழமை துணைத் தலைவா் அறிவிக்கப்பட்ட இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று பதவியேற்றுக் கொள்ளக் கூடாது என தகராறு செய்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் அமிா்தலிங்கம் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT