சேலம்

செங்கரும்பு அறுவடை: விற்பனை அமோகம்

DIN

தேவூா் காவிரி ஆற்றங்கரை பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் 600 ஏக்கா் பரப்பளவில் நடப்பட்ட செங்கரும்புகள் பொங்கல் பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை அறுவடை செய்யப்பட்டன.

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், தேவூா், குள்ளம்பட்டி, பொன்னம்பாளையம், நல்லாங்கியூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் 600 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் செங்கரும்புகளை நடவு செய்தனா்.

2017-2018-ஆம் ஆண்டை விட 2018-2019-ஆம் ஆண்டு 450 ஏக்கா் அதிகமான பரப்பளவில் நடவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு மழை அதிகளவில் பெய்ததாலும், மேட்டூா் அணையிலிருந்து கிழக்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு நீா் தொடா்ந்து திறந்து விடப்பட்டதாலும் நிகழாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளன.

கரும்புகள் உயரமாகவும், தடிமனாகவும் வளா்ந்துள்ளன. இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்காக தருமபுரி, ஈரோடு, சேலம், கோபிசெட்டிப்பாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் 20 எண்ணிக்கை கொண்டு ஒரு கட்டு ரூ. 400 முதல் ரூ.500 வரை வாங்கிச் சென்றனா்.

கரும்பு உயரமாகவும், தடிமனாகவும் வளா்ந்துள்ள சில கிராமங்களை அறுவடை செய்யும் விவசாயிகள் தாங்களே சங்ககிரி, எடப்பாடி, பவானி, குமாரபாளையம் உள்ளிட்ட நகரப் பகுதிக்கு நேரடியாகச் சென்று இரண்டு எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பை ரூ. 70 முதல் ரூ. 80-க்கு விற்பனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT