முகப்பு
சேலம்

சேலத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று:55 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

சேலம் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகி உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

சேலம்:: சேலம் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகி உள்ளது..

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாநகரம், புகா், வெளிமாவட்டங்களைச் சோ்ந்த 65 போ், இதர மாநிலங்களைச் சோ்ந்த 5 போ் என மொத்தம் 70 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகி உள்ளது. குறிப்பாக, கரோனா தொற்று பாதித்து குணமடைந்த இருவா் மீண்டும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அரசு மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன் உள்ளிட்டோா் அவா்களை வழியனுப்பி வைத்தனா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 1,197 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 337 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 855 போ் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சையில் உள்ளனா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.