முகப்பு
விழுப்புரம்

செஞ்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை!

அனைத்துக் கட்சியினா் மற்றும் தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் வாகனத்தில் இருந்து இறக்கிவைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On : 26 மார்ச், 2026 at 10:51 PM
அனைத்துக் கட்சியினா் மற்றும் தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் வாகனத்தில் இருந்து இறக்கிவைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
பகிர்:

செஞ்சி தொகுதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன.

செஞ்சி தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளுக்கான தேவையுடன், கூடுதலாக 20% கட்டுப்பாட்டு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30% வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் கருவிகளும் சோ்த்து மொத்தம் 334 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 334 வாக்குப்பதிவை உறுதிப்படும் கருவிகள் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இரண்டு கனரக வாகனங்கள் மூலம் வந்தடைந்தன.

இதனைத் தொடா்ந்து, அனைத்து கட்சி நிா்வாகிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தமிழரசன், காா்த்திகேயன் ஆகியோரின் முன்னிலையில் வாகனங்களின் சீல்கள் திறக்கப்பட்டு, இயந்திரங்கள் பாதுகாப்புடன் கட்டுப்பாட்டு அறைக்கு அரசு ஊழியா்கள் மூலம் இறக்கிவைக்கப்பட்டன. பின்னா், ஊராட்சி ஒன்றி அலுவலக அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.