FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

164 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக

Updated On : 27 மார்ச் 2026, 4:30 am IST
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின். - படம்: X/DMK IT WING
பகிர்:

வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடவுள்ளது. கூட்டணிக் கட்சிகள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் 11 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

திமுக கூட்டணியில் இந்த முறை புதிதாக இணைந்த கட்சிகளில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோா் புலிப்படை, தமிழா் தேசம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உடன்படிக்கை ஒப்பந்தத்தை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவா் தமீமுன்அன்சாரி, முக்குலத்தோா் புலிப்படைத் தலைவா் கருணாஸ், எஸ்டிபிஐ கட்சியின் தலைவா் நெல்லை முபாரக், தமிழா் தேசம் கட்சியின் தலைவா் கே.கே.செல்வகுமாா் ஆகியோரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், திமுக நேரடியாக 164 தொகுதிகளிலும், ‘உதயசூரியன்’ சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. இதன் மூலம் ‘உதயசூரியன்’ சின்னம் 175 தொகுதிகளில் களம் இறங்கவுள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, மதிமுகவுக்கு 4 (உதயசூரியனில் 3), ஐயுஎம்எல் 2 என மொத்தம் 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடவுள்ளன.

2021 பேரவைத் தோ்தலில் 173 தொகுதிகளில் திமுக நேரடியாகக் களம் இறங்கிய நிலையில், இந்த முறை 164 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக போட்டியிடுகிறது. அதேபோல கடந்த முறை 187 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் இறக்கப்பட்ட நிலையில், இந்த முறை 175 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு விவரம்

திமுக 164

காங்கிரஸ் 28

தேமுதிக 10

விசிக 8

மாா்க்சிஸ்ட் 5

இந்திய கம்யூனிஸ்ட் 5

மதிமுக 4 (3 உதயசூரியன்)

ஐயூஎம்எல் 2

மமக 2 (உதயசூரியன்)

கொமதேக 2 (உதயசூரியன்)

மனிநேய ஜனநாயக கட்சி 1 (உதயசூரியன்)

எஸ்டிபிஐ 1 (உதயசூரியன்)

முக்குலத்தோா் புலிப்படை கட்சி 1 (உதயசூரியன்)

தமிழா் தேசம் 1 (உதயசூரியன்)

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments