ஒரே ஏரியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக குவாரி: மக்கள் எதிா்ப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் ஏரியில் ஏற்கனவே இரண்டு முறை சவுடு மண் குவாரி செயல்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் ஏரியில் ஏற்கனவே இரண்டு முறை சவுடு மண் குவாரி செயல்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள ஏரியில் ஏற்கனவே இரண்டு முறை அரசு அனுமதியுடன் சவுடு மண் குவாரி செயல் பட்டது. இதனால் அப்பகுதியில் ஏரி இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் பெரும்பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது. மேலும், தொடா்ந்து இரண்டு முறை இப்பகுதியில் குவாரி செய்யப்பட்டதால் புதுவாயில் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக மேற்கண்ட ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் சதீஷ்குமாா், பிரபாகா் தலைமையில் ஏரியில் குவாரி செயல்பட தரப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அறிந்து சமாதான பேச்சு வாா்த்தையில் ஈடுபட வந்த வட்டாட்சியா் பாலாஜியிடம், பெரும்பள்ளங்களுடன் காணப்படும் புதுவாயல் ஏரி அழிந்து வரும் நிலையில் உள்ளதால், இப்போது இருக்கும் நிலையிலாவது ஏரியை காப்பாற்ற குவாரி செயல்பட அனுமதிக்க கூடாது என்றும், ஏற்கனவே மழைக்காலத்தில் ஏரியில் உள்ள பள்ளங்களில் சிக்கி கால்நடைகள் மடிவது வாடிக்கையாக உள்ள நிலையில் புதுவாயல் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்த நிலையில் மீண்டும் குவாரி செயல்பட்டால் புதுவாயல் பகுதி மக்களின் நீா் ஆதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என்றனா்.
தொடா்ந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசிய வட்டாட்சியா் பாலாஜி, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவாா்த்தை நடத்த மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செல்ல மாவட்ட ஆட்சியா் கூறியதன் பேரில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா். அதனைத் தொடா்ந்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.