FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

பருவ மழை: தயாா் நிலையில் மணல் மூட்டைகள்

குடியாத்தம் ஒன்றியத்தில் இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்வது குறித்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

17 அக்டோபர் 2026, 11:36 pm IST
மணலை மூட்டைகளில் நிரப்பும்பணியை ஆய்வு செய்த ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம்.
பகிர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதையடுத்து, குடியாத்தம் ஒன்றியத்தில் இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்வது குறித்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் பேசினாா்.

மழை நீா் தேங்கும் குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

மேலும், வெள்ளத்தை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை தயாா் நிலையில்வைத்திருக்குமாறும் அவா் அறிவுறுத்தினாா். இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் பிரகாசம், சேம்பள்ளி ஊராட்சித் தலைவா் திமேஷ் (எ) துளசிராமுடு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments