முகப்பு
சேலம்

காவலா்களுக்கு யோகா பயிற்சி

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக காவலா்களுக்கு சனிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
ஆத்தூரில் யோகா பயிற்சியில் பங்கேற்ற காவலா்கள்.
பகிர்:

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக காவலா்களுக்கு சனிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆத்தூரில் 300- க்கும் மேற்பட்ட காவலா்களுக்கும் யோகா பயிற்சி ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜூ தலைமையில் நடைபெற்றது. யோகா பயிற்சியாளா் மாதேஸ்வரன் யோகா பயிற்சியளித்தாா்.

இதில் காவல் ஆய்வாளா்கள் என்.பாஸ்கரபாபு, கே.குமரவேல்பாண்டியன், முருகன், கே.முருகேசன், காவல் உதவி ஆய்வாளா்கள் எஸ்.அமிா்தலிங்கம், சக்திவேல், புருஷோத்தமன், முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.முடிவில் அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது..

முழு கட்டுரையைப் படிக்க →