சேலம்

அரசநத்தம் ஊராட்சியில் மேட்டூர் குடிநீர் விநியோகம் துவக்கம்

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அரசநத்தம் ஊராட்சிக்கு மேட்டூர் குடிநீர் விநியோகத்தை ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி சனிக்கிழமை துவக்கிவைத்தார். 

அரசநத்தம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னை வெகுகாலமாக இருந்து வந்தது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமது தொகுதி நிதியில் இருந்து ரூ.5லட்சம் மற்றும் அரசநத்தம் ஊராட்சி பொதுநியில் இருந்து ரூ 1 லட்சம் நிதியுதவியுடன் 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய குடிநீர்க் குழாய் அமைத்து ஊராட்சிக்கு குடிநீர் விநியோகத்தை ஆர்.எம்.சின்னதம்பி துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் லிங்கம்மாள்பழனிசாமி ஊராட்சிமன்றத்லைவர் சி.வெள்ளையன் துணைத்தலைவர் டி.ஜெய்சங்கர் உறுப்பினர்கள் முருகேசன் ராஜ்குமார் மல்லிகா சுமதி பாப்பாபெரியசாமி பேபி ஊராட்சி செயலாளர் ஜி.அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சட்டப்பேரவை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT