சேலம்

சங்ககிரி டிரஸ்ட் சார்பில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு இலவச ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கல் 

சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், பாளையங்கோட்டை ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் சார்பில் சங்ககிரி பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள்,

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், பாளையங்கோட்டை ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் சார்பில் சங்ககிரி பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடைய மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம்,  சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், பாளையங்கோட்டை ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடையை மாத்திரைகளை பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மைபணியாளர்கள் 100 பேருக்கு வழங்கினார். 

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் மாத்திரைகளின் நன்மைகள் குறித்து தூய்மை பணியாளர்களிடத்தில் விளக்கிப் பேசினார். 

பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஷ், டிரஸ்ட் துணைத்தலைவர் எம்.பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.ராகவன், நிர்வாகிகள் எஸ்.கணேஷ், பொறியாளர் வேல்முருகன், பெஸ்ட் கோபால் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமன்செய்து சீா்தூக்கும் கோல்!

கடத்தல் வழக்கில் இருவா் கைது

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

வேலூா், ராணிப்பேட்டைக்கு இன்று துணை முதல்வா் வருகை!

ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மூத்த பெண் நக்ஸல் சரண்!

SCROLL FOR NEXT