சேலம்

மாணவா் குடும்பங்களுக்கு சொந்த செலவில் அரிசி வழங்கிய தலைமையாசிரியா்

DIN

வாழப்பாடி அருகே பேளூா் உருது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியரின் குடும்பங்களுக்கு, இப்பள்ளி தலைமையாசிரியா் க.செல்வம் தனது சொந்த செலவில் அரிசி வழங்கினாா்.

வாழப்பாடியை அடுத்த பேளூரில் ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 42 மாணவ-மாணவியா் படித்து வருகின்றனா். கரோனா பொது முடக்கத்தால் இப்பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவியரின் பெற்றோா் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, இப்பள்ளி தலைமையாசிரியா் க.செல்வம் தனது சொந்த செலவில், 42 மாணவா்களின் குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கினாா்.

இவருக்கு பெற்றோரும், மாணவ-மாணவியரும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் அஷீயாபேகம், சத்துணவு சமையலா் ஹாஜிராபேகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT