முகப்பு
சேலம்

இந்திய ராணுவத்தில் மகனை சேர்ப்பதே எனது லட்சியம்: ராணுவ வீரர் மதியழகன் மனைவி உருக்கம்

எல்லைப் பாதுகாப்பு பணியின்போது மரணமடைந்த ராணு வீரர் மதியழகனின் மனைவி தமிழரசி தனது ஒரே மகனை இந்திய ராணுவப்பணிக்கு அனுப்புவதே தனது லட்சியம் என உருக்கமுடன் கூறினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:

எல்லைப் பாதுகாப்பு பணியின்போது மரணமடைந்த ராணு வீரர் மதியழகனின் மனைவி தமிழரசி தனது ஒரே மகனை இந்திய ராணுவப்பணிக்கு அனுப்புவதே தனது லட்சியம் என உருக்கமுடன் கூறினார்.

எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி, வெற்றிலைக்காரன்காடு, இப்பகுதியை சோந்த பெத்தாகவுண்டர்,  ராமாயி தம்பதியின் மூத்த மகன் மதியழகன் (40). இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல், இந்திய எல்லைப்பாதுகாப்பு படையில் முதல் நிலை ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் மாநிலம் ரஜோரிப் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில், மதியழகன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய திடீர் தாக்குதலில் அவர் வீரமரணம் அடைந்தார். 

இந்நிலையில் அவர் உடல் சனிக்கிழமை அன்று அவரது சொந்த ஊரில், ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. தனது கணவர் இறப்பு குறித்து அவரது மனைவி தமிழரசி கூறுகையில்: எனது கணவர் இறப்பு என்வாழ்வில் ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு, இருந்தபோதும் எனது கணவர் நமது தாய் திருநாட்டை காக்கும் பணியில் உயிரிழந்தார் என்பதனை நானும் எனது குழந்தைகளுகம் பெருமையாக கருதுகிறோம். குடும்ப தலைவரை இழந்து தவிக்கும் எங்களுக்கு, எங்கள் குடும்ப சூழல்நிலை அறிந்து, நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும் வீரமரணமடைந்த எனது கணவரின் உடலினை சொந்த ஊர்கொண்டுவர உதவிய சகராணுவ அதிகாரிகளுக்கும், உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும், எனது குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனது 12 வயது மகன் ரோகித் மற்றும் 7வயது மகள் சுபஸ்ரீயை நல்லமுறையில் படிக்கவைக்க, அரசு உதவிபுரிந்திடவேண்டும். 

எனது மகன் ராணுவப்பள்ளியில் கல்வி பயின்று, இந்திய ராணுவத்தில் ஒர் சிறந்த ராணுவ அதிகாரியாக பணிபுரிந்திட வேண்டும் என்பதே எனது கணவரின் ஆசை, அவரது ஆசையை நிறைவேற்றிடும் வகையில், தனது தந்தையினை தொடர்ந்து எனது ஒரே மகன் ரோகித்தையும், இந்திய ராணுவப்பணியில் சேர்பதே எனது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளேன். எனது மகனை ஓர் சிறந்த ராணுவ அதிகாரியாக உருவாக்கிட, அத்துறை சார்ந்த அலுவலர்களும், அரசும் உதவிட வேண்டும் என இத்தருணத்தில் கண்ணீருடன் கேட்டுக்கொள்வதாக கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →