சேலம்

சேலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள்

சேலத்தில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 

DIN

சேலத்தில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 

தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட அக்கட்சியில் இணைந்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் இன்று கட்சி இணைப்பு விழா நடைபெற்றது. 

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர்  தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னதாக சீனா இந்திய சண்டையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து எவ்வித கட்சியிலும் உறுப்பினராக கூட இல்லாமல் தமிழ் மாநில காங்கிரசில் இணைந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட தலைவர் பொன்னாடை போற்றி அவர்களை கவுரவித்தார். 

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக கூட்டத்தில் கரோனா தொற்று நோய் யாருக்கும் பரவாமல் இருக்கும் வகையில் அனைவருக்கும் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு கூட்டம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையிலும், மாநில இளைஞரணி தலைவர் ரகுநந்தகுமார் உள்ளிட்ட தமாகா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

நோய் தொற்று காரணமாக 250 நபர்களும் ஒன்றாகக் கூடி கட்சி இணைப்பு விழா நடைபெறா வண்ணம் இந்த கூட்டம் சமூக இடைவெளியை கடைபிடித்து இன்று நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT