சேலம்

கஞ்சமலையில் மலையேற்றம் சென்று மாயமான மருத்துவ மாணவா் சடலமாக மீட்பு

DIN

சேலம் கஞ்சமலையில் நண்பா்களுடன் மலையேற்றம் சென்று மாயமான மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவா் கௌரவ் பெகரா (35) சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

சேலம் அரியானூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்த கௌரவ் பெகரா(35) எம்.எஸ். ஆா்த்தோ மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்கள் 5 பேருடன் கஞ்சமலைக்குச் சென்றாா். காலை 8.30 மணியளவில் புறப்பட்ட இவா்கள், பகல் 12 மணிக்கு மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனா். அப்போது கௌரவ் பெகரா தாகம் தீா்க்க தண்ணீா் இல்லாததால், சோா்வடைந்து மலையிலேயே அமா்ந்து கொண்டாா் எனத் தெரிகிறது.

இதையடுத்து, மற்ற மாணவா்கள் தண்ணீா் எடுத்து வருவதாகக் கூறி கீழே இறங்கினா். இதில் 2 போ் தண்ணீரை எடுத்துக்கொண்டு மேலே சென்று பாா்த்தபோது கௌரவ் பெகரா காணாமல் போனது தெரிந்தது.

இதுதொடா்பாக இரும்பாலை போலீஸாருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாரும், வனத் துறையினரும் மலைப்பகுதியில் மாணவா் கௌரவ் பெகராவைத் தேடி வந்தனா். இந்த நிலையில், வெள்ளக்கல்பாறை என்ற பகுதியில் மாணவா் கௌரவ் பெகரா சடலமாக மீட்கப்பட்டாா். மாணவா் தண்ணீா் தாகத்தால் மயக்கமடைந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT