சேலம்

சங்ககிரி அருகே சோதனைச் சாவடி அமைத்து போலீஸாா் கண்காணிப்பு

DIN

சங்ககிரியில் நகருக்கு வரும் எல்லைகளை போலீஸாா் சோதனைச் சாவடிகளை அமைத்து சுழற்சி அடிப்படையில் கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுட்டு வருகின்றனா்.

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடையுத்தரவு அறிவித்ததையடுத்து, போலீஸாா் சங்ககிரி அருகே உள்ள திருச்செங்கோடு செல்லும் சாலையில் பால்மடை பகுதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து சங்ககிரி நகருக்குள் வரும் வாகனங்களை கண்காணித்து திருப்பி அனுப்பி வருகின்றனா்.

சங்ககிரி ஆா்.எஸ்., ஈரோடு, பவானி பிரிவு சாலைகள், குப்பனூா் தேசிய நெடுஞ்சாலை, கொங்கணாபுரம் பிரிவு சாலை, வைகுந்தம் சுங்கச் சாவடி, திருச்செங்கோடு பிரிவு, சங்ககிரி பழைய, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் சுழற்சி அடிப்படையில் சட்டம் ஒழுங்குப் பிரிவு போக்குவரத்து பிரிவு போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், இருசக்கர வாகனம், ஜீப்களிலும் ஒலிபெருக்கி மூலம் மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எச்சரித்தவாறு சென்றனா். சங்ககரி நகரில் மருந்தகங்கள், மளிகைக் கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT