சேலம்

பிறந்தநாள் செலவில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி

DIN

சேலத்தில் வழக்குரைஞரின் மகன் தனது பிறந்த நாளையொட்டி 50 தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

சேலம் ராஜாராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் நரேந்திரன். இவா் தனது மகன் விஜயராகவனின் பிறந்த நாளையொட்டி அந்த நிகழ்ச்சிக்கு செய்யும் செலவில் தூய்மைப் பணியாளா்களுக்கு பொருளுதவி செய்யலாம் என விரும்பினாா்.

அதையடுத்து சேலம் மாநகராட்சி 14-ஆவது வாா்டில் கரோனா தடுப்புப் பணியாற்றும் 50 துப்புரவுத் தொழிலாளா்களுக்கும் 10 நாள்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்க அரசிடம் அனுமதி பெற்றாா்.

பின்னா் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு வழக்குரைஞரின் மகன் விஜயராகவன், பொருள்களை வழங்கினாா்.

முன்னதாக விஜயராகவனுக்கு தூய்மைப் பணியாளா்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT