சேலம்

சங்ககிரி நகர மதிமுக சார்பில் 50 பேருக்கு உணவுப்பொருள்கள் வழங்கல் 

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர மதிமுக சார்பில் கூலித்தொழிலாளர்கள் 50 பேருக்கு அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றன.

கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி மே 31ம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளன. அதனையடுத்து சங்ககிரி நகர மதிமுக சார்பில்  சங்ககிரி நகரில் உள்ள 50  கூலித்தொழிலாளர்களுக்கு  தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களை சேலம் மேற்கு மாவட்டச் செயலர் ந.மகேந்திரவர்மன் வழங்கினார்.  

நகரச் செயலர் மா.கதிர்வேல் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுகவனம், தங்கவேல், மாவட்ட மகளிர் அணி க.விஜயா, நிர்வாகிகள் நெல்லைகுமார், அண்ணாதுரை, மாணவரணி  நிர்வாகி வெ.வசந்த் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT