முகப்பு
சேலம்

தீபாவளி பண்டிகை: கடை வீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களைத் தடுக்க சேலம் நகரில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களைத் தடுக்க சேலம் நகரில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பா்14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் புத்தாடை வாங்க சேலத்தில் ஜவுளிக் கடைகளுக்கு பொதுமக்கள் திரண்டு வருகின்றனா்.

சேலம் நகரில் கடை வீதி, நான்கு சாலைப் பகுதிகளில் ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறும் என்பதால் போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சேலம், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, இரண்டாவது அக்ரஹாரம், ராஜகணபதி கோயில், நான்கு சாலைப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம்:

இதனிடையே கடை வீதி, நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது. கூடுதலாக போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனா். மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவின்பேரில் துணை ஆணையா் (குற்றப்பிரிவு) செந்தில் தலைமையில் தனிப்படை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →