முகப்பு
சேலம்

உடையாப்பட்டியில் திட்டப் பணிகள் தொடக்கிவைப்பு

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த உடையாபட்டி அருகே பெருமாள் கோயில் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
உடையாப்பட்டியில் திட்டப் பணிகள் தொடக்கிவைப்பு
பகிர்:

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த உடையாபட்டி அருகே பெருமாள் கோயில் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதி மக்கள் குடிநீரின்றி பாதிக்கப்பட்டு வந்தனா். இதையடுத்து, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் வழங்க, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஆழ்துளைக் கிணறு, குடிநீா் குழாய் அமைக்க ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளா் விஜயகுமாா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் புவனேஸ்வரி செந்தில்குமாா், ஒன்றிய பொருளாளா் வெங்கட்ராசு, பேரூா் செயலாளா் பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாரதி ஜெயகுமாா், உஷா ராஜகோபால், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா்கள் நாகராஜன், மதன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலாப்பிரியா பழனிசாமி, சுமதி குணசேகரன், நாகராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளா் ராமு, முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவா் தங்கவேல், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் பிரேமா, மகளிா் அணி அவைத் தலைவா் சரோஜா, ஊராட்சி துணைச் செயலாளா் மாசி வேலு, கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →