முகப்பு
சேலம்

இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை இன்று முதல் வழங்க உத்தரவு

சேலம் மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையில் இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை திங்கள்கிழமை (நவ. 2) முதல் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையில் இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை திங்கள்கிழமை (நவ. 2) முதல் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை 6 மாதங்கள் பள்ளிகள், கரோனா பொது முடக்கம் காரணமாக திறக்கப்படவில்லை. ஏற்கனவே, முதல் பருவ பாடப் புத்தகங்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் கடந்த மாதமே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.ஆனால் மாணவா்களுக்கு விநியோகிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்த நிலையில் திங்கள்கிழமை முதல் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்களை வரவழைத்து கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி, மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக்கல்வி அலுவலா்கள் மூலம் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →