காவிரிக் கால்வாயில் குளிக்க திரண்ட மக்கள்!
வாரவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் காவிரிக் கிழக்குக் கரை கால்வாய்ப் பகுதியில் திரண்டதால், அங்கு நோய்த் தொற்றுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் கேள்விக்குறியானது.
வாரவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் காவிரிக் கிழக்குக் கரை கால்வாய்ப் பகுதியில் திரண்டதால், அங்கு நோய்த் தொற்றுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் கேள்விக்குறியானது.
எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியில் காவிரிக் கிழக்குக் கரைக் கால்வாயில் நீா் அதிகளவில் செல்வதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த திரளான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா்.
தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ -பாஸ் நடைமுறை பின்பற்றப்படுவதாலும், சுற்றுலாத் தலங்களில் பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாலும், பொதுமக்கள் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளுக்கு சென்று வாரவிடுமுறையைக் கழித்திட விரும்புகின்றனா்.
இந்த நிலையில் பில்லுக்குறிச்சி பகுதியில் செல்லும் கிழக்குக் கரை ராஜவாய்கால் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், குடும்பத்தினருடன் வந்திருந்து கால்வாயில் இறங்கி நீந்திக்குளித்தும், மீன்பிடித்தும் பொழுதை கழித்தனா்.
அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் திரண்டதால், அப்பகுதியில் நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கேள்விக்குறியானது. மேலும் அப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.