ஏற்காடு மலைகிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கம்
ஏற்காடு மலை கிராமங்களுக்கு பேருந்துகள் இயங்க துவங்கியதால் இயல்பு வாழ்க்கைக்கு மலைகிராம மக்கள் திரும்பியுள்ளனர்.
ஏற்காடு மலை கிராமங்களுக்கு பேருந்துகள் இயங்க துவங்கியதால் இயல்பு வாழ்க்கைக்கு மலைகிராம மக்கள் திரும்பியுள்ளனர்.
சேலம் போக்குவரத்துதுறை சார்பில் 5 அரசுப் பேருந்துகளை கிராமங்களுக்கும், 3 அரசுப் பேருந்துகளை சேலம் - ஏற்காடு மலைப்பாதை வழியாகவும், குப்பனூர் வழிதடத்திலும் ஞாயிறுக்கிழமை இயக்கப்பட்டன. மேலும் இரு தனியார் பேருந்துகளும் இயங்கி வருகிறது. ஆனால், பேருந்தில் குறைந்த அளவில் பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இருப்பினும், வழக்கம்போல் வாரச் சந்தை வியாபாரிகள் வருகை புரிந்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்து சுற்றுலாப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்காடு - காந்தி பூங்கா பேருந்து நிலைய சாலையில் வியாபாரிகள் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளதால் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
காவல்துறையினர் போக்குவரத்து, சாலை விதி சட்டத்தை அமல்படுத்த தயங்குகிறார்கள்.