முகப்பு
சேலம்

சேலம் அருகே நகைக் கடையில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

சேலம் அருகே தங்க நகைக் கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகள்,தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
திருட்டு நடைபெற்ற நகைக் கடை.
பகிர்:

சேலம் அருகே தங்க நகைக் கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகள்,
தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. 

சேலம் அருகே உள்ள சித்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் சித்தனூரில் நகைக் கடை வைத்துள்ளார். தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளிப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இதுதவிர வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்தார். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜா கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் ராஜா கடையைத் திறக்க வந்தபோது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் , ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் தங்க நகைகள் திருட்டு போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இரும்பாலை காவல் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். இதன் பேரில் உதவி ஆணையர் யாஸ்மின், இரும்பாலை காவல் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்தனர். 

நகைக்கடைக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். கடையில் சிசிடிவி கேமிராக்கள் உள்ளது. இதில் இரண்டு உருவங்கள் பதிவாகி உள்ளது. இரண்டு இளைஞர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவதும் பின்னர் பொருள்களை பையில் போட்டு எடுத்துச் செல்வதும் பதிவாகி உள்ளது. இரண்டு இளைஞர்களும் ஸ்பைடர்மேன் போல உடை அணிந்து இருப்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் யார் என தற்போது விசாரணை நடக்கிறது.

சேலம் மாநகர காவல் ஆணையாளர் த.செந்தில்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் யாஸ்மின் தலைமையில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →