மேட்டூர் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே கருணைத் தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூர் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே கருணைத் தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூர் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் திறன் கொண்டநான்கு அலகுகள் உடைய ஒரு பிரிவும் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகுகொண்ட ஒரு பிரிவும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அனல் மின் நிலையங்களிலும் 500-கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் தீபாவளி போனஸ், கருணைத் தொகை வழங்கக்கோரி அனல்மின் நிலையம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாதம் 30 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும், ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும், ஊதியத்தை முறையாக தொழிலாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், வருகைப்பதிவு வழியாக பராமரித்தல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.