ஏற்காட்டில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு
ஏற்காட்டில் இறந்த ஆன்மாக்கள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கல்லறைத் திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 தேதி அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று கிறிஸ்துவ குடும்பங்களில் மரித்த தாய், தந்தை உடன் பிறந்ததோர் உறவினர்கள், நண்பர்களின் ஆன்மாக்கள் நித்திய இளைபாறுதல் அடைய வேண்டும் என திருப்பலியில் ஒப்பு கொடுத்து வேண்டிக்கொண்டனர்.
குடும்பங்களில் இறந்து அடக்கம் செய்யப்பட கல்லரைத் தோட்டத்தில் அருட் தந்தையார்கள் ஜெப வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக கோயில்களில் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்துவர்கள் இதில் பங்கேற்றனர்.