சேலம்

வதந்தியை நம்பி அரசுப் பள்ளிக்கு வந்த சிறுவா்கள்

DIN

சேலம் அருகே காட்டூா் கிராமத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது என்ற வதந்தியை நம்பி மதிய உணவுடன் சிறுவா்கள் பள்ளிக்கு வந்ததால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

வரும் 16-ஆம் தேதி 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே சேலம், கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூா் கிராம ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இப் பள்ளித் திறக்கப்பட்டுவிட்டது என்று செவ்வாய்க்கிழமை வதந்திப் பரவியது. இதை நம்பி, வழக்கமாக பள்ளிக்கு வருவதுபோல் சீருடை அணிந்து புத்தகப் பையுடன் மதிய உணவு பையை எடுத்துக் கொண்டு 20-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் பள்ளிக்கு வந்தனா்.

தகவல் அறிந்து வந்த பள்ளி ஆசிரியா்கள், ‘இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை, அரசு அறிவித்தவுடன் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT