விபத்தில்லா தீபாவளி: காடையாம்பட்டியில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்
விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் காடையாம்பட்டியில் முக்கிய இடங்களில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் காடையாம்பட்டியில் முக்கிய இடங்களில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
கரோனா தொற்று உள்ள நிலையில் பாதுகாப்பான தீபாவளியை பொது மக்கள் கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்அடிப்படையில் காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில் குழுவினருடன் நீர்த்தாங்கி வண்டியில் சந்தப்பேட்டை மற்றும் தீவட்டிப்பட்டியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் எதிர்வரும் தீபாவளி-2020 பண்டிகையை முன்னிட்டு தீவிபத்தில்லாமல் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது குறித்த "விபத்தினை தவிர்ப்போம்... விழிப்புடன் இருப்போம்'' விபத்தில்லாத தீபாவளி... வீடு தோரும் மகிழ்ச்சி'' விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சந்தைப்பேட்டை பகுதியில் இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.