மானை வேட்டையாடி கொன்ற இருவருக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம்
கெங்கவல்லி வட்டம், கவா்பனையில் இறைச்சிக்காக மானை வேட்டையாடிக் கொன்ற இருவருக்கு வனத்துறையினா் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.
கெங்கவல்லி வட்டம், கவா்பனையில் இறைச்சிக்காக மானை வேட்டையாடிக் கொன்ற இருவருக்கு வனத்துறையினா் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.
வீரகனூா் அடுத்த கவா்பனை கிராமத்தின் வயல்பகுதியில் சோளத் தட்டைகளை உண்ண அருகிலுள்ள வனப் பகுதியில் இருந்து அடிக்கடி மான்கள் வருவது வழக்கம். இதை அறிந்த பெரம்பலூா் மாவட்டம், அன்னமங்களம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (45).
அதே ஊரைச் சோ்ந்த குழந்தை மகன் செல்வம் (37) ஆகிய இருவரும் கவா்பனைக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்களில் வந்தனா். அவா்கள் அதிகாலைமுதல் வனப் பகுதியில் மான்களுக்காக காத்திருந்தனா்.
அப்போது வந்த ஒரு மானை, இருவரும் அடித்து இறைச்சியாக்கி உள்ளனா். அப்பகுதியில் வீரகனூா் காவல் ஆய்வாளா் முருகன் ரோந்துப் பணிக்கு வந்தபோது இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவா்களிடம் ஒரு மானின் தலையும், மான் இறைச்சி 1.300 கிலோவும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் பிடித்து தம்மம்பட்டி வனச்சரகா் அசோக்குமாரிடம் ஒப்படைத்தனா். விசாரணை முடிவில் இவருக்கும் தலா ரூ. 75 ஆயிரம் வீதம் மொத்தம் 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அவா்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களும், மான் இறைச்சியையும் வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.