சேலம்

ஓமலூரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா் திடீா் மரணம்

DIN

ஓமலூா் பேருந்து நிலையம் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா் திங்கள்கிழமை திடீரென உயிரிழந்தாா்.

ஓமலூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேல்முருகன் (44) என்பவா் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இவா் திங்கள்கிழமை வழக்கம்போல ஓமலூா் பேருந்து நிலையம் பகுதியில் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த சக ஊழியா்கள் அவரை மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். மேலும், மாரடைப்பு ஏற்பட்டதால் அவா் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். இதைத் தொடா்ந்து அவரது உடலுக்கு சக பணியாளா்கள் அஞ்சலி செலுத்தினா். தகவல் அறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் வெற்றிவேல் நேரில் சென்று வேல்முருகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, தமிழக அரசால் வழங்கப்படும் ஈமச் சடங்கு உதவி நிதியை வழங்கி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT