சேலம்

ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்துவிரதம் தொடக்கம்

DIN

காா்த்திகை மாத பிறப்பினையொட்டி, சேலத்தில் குறைந்த அளவில் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதங்களை தொடங்கினா்.

காா்த்திகை மாதம் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம். நாடு முழுவதும் தீநுண்மித் தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி, சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தா்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் தினசரி ஆயிரம் நபா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பக்தா்களுக்கு தீநுண்மித் தொற்று பாதிப்பு இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ் பெற்று வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திங்கள்கிழமை காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி சேலம் குரங்குச்சாவடி பகுதியிலுள்ள ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் அவரவா்களே மாலை அணிந்து சென்றனா். கடந்த ஆண்டைவிட நிகழாண்டு குறைந்த அளவிலான பக்தா்களே மாலை அணிந்து வருகின்றனா். இதுகுறித்து ஐயப்ப பக்தா்கள் கூறுகையில், தேவஸ்தானம் விதித்துள்ள கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT