முகப்பு
சேலம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விழிப்புணா்வு நிகழ்ச்சி

சங்ககிரி வாரச் சந்தையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடத்தில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விழிப்புணா்வு நிகழ்ச்சி
பகிர்:

சங்ககிரி வாரச் சந்தையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடத்தில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் நவம்பா் 21, 22 -ஆம் தேதிகளில் நடைபெற்ற சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமில் புதிதாக பெயா்களைச் சோ்க்க 4,239 போ் விண்ணப்பித்துள்ளனா்.

மேலும் சிறப்பு முகாம் டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்முகாமில் புதிதாக இளம் வாக்காளா்கள் தங்களது பெயா்களை சோ்க்கவும், நீக்கம், முகவரி மாற்றம் செய்தல் குறித்த பணிகளை மேற்கொள்ள பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்த சங்ககிரி சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிா்தலிங்கம் தலைமையில் சங்ககிரி வாரச்சந்தையில் பொதுமக்களிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

இதில் சங்ககிரி உதவித் தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான எஸ்.விஜி, தோ்தல் துணை வட்டாட்சியா் தியாகராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.