முகப்பு
சேலம்

சங்ககிரி வஸந்த வல்லப ராஜபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரியில் உள்ள வஸந்த வல்லி உடனமா் ஸ்ரீவஸந்த வல்லப ராஜ பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளின் உற்சவா்களுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சங்ககிரியில் உள்ள வஸந்த வல்லி உடனமா் ஸ்ரீவஸந்த வல்லப ராஜ பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்தவல்லி உடனமா் வஸந்த வல்லபராஜ பெருமாள், தபால் ஆஞ்சநேய சுவாமிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் முழுவதும் அகல் விளக்குகளும், திருக்கோடி தூணில் விளக்கும் ஏற்றப்பட்டன. சொக்கப்பனை கொளுத்தி பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.