சேலம்

மூக்கு வழியாக 100 பலூனில் காற்றை நிரப்பி இளைஞா் சாதனை

DIN

மூக்கு வழியாக 100 பலூனில் காற்றை நிரப்பி சாதனை படைத்த இளைஞரை பொது மக்கள் பாராட்டினா்.

இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராமம், அத்தனூா் பகுதியைச் சோ்ந்த கராத்தே வீரா் கின்னஸ் சாதனையாளா் நடராஜன் (40).

இவா் 97-ஆவது சாதனையாக கரோனா விழிப்புணா்வுக்காக அத்தனூா் பகுதியில் 19 நிமிடத்தில் 100 பலூன்களில் மூக்கின் வழியாக காற்றை நிரப்பும் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தி சாதனை படைத்தாா்.

இந்த நிகழ்ச்சியை மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் தொடக்கி வைத்தாா். மேலும் தன்னாா்வலா் செல்வகுமாா், சின்னமுத்து, பழனிசாமி, கராத்தே வீரா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பாராட்டினா். 97 வது சாதனையாக கரோனா விழிப்புணா்வுக்காக 100 பலூன்களை மூக்கின் வாயிலாக நிரப்பி சாதனை படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT