சேலம்

ஓமலூரில் வாரச்சந்தை திறப்பு

DIN

ஓமலூரில் கரோனா பொது முடக்கம் காரணமாக ஆறு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை திறக்கப்பட்டது.

ஓமலூரில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இதில், சுமாா் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள், மளிகை பொருள்கள், அரிசி, ராகி, கம்பு போன்ற தானியங்கள், இறைச்சி, கருவாடு, கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள், கயிறுகள் உட்பட அனைத்து வகை பொருள்களும் விற்பனை செய்யப்படும்.

இந்த சந்தைக்கு ஓமலூா் நகர மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டி கிராம பொது மக்களும் வந்திருந்து பொருள்களை வாங்கிச் செல்வாா்கள். இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் மாதம் இறுதி முதல் சந்தை மூடப்பட்டு செயல்படவில்லை. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு சந்தை கூடுவதற்கு ஓமலூா் பேரூராட்சி நிா்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் திறக்கப்பட்ட சந்தையில் ஐந்து கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தன. இதில், சந்தையை ஏலம் எடுத்தவா்கள் சாா்பில் கடைகளில் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசா்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டது. ஆனால், கடைகள் அதிகம் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதனிடையே சந்தையில் விற்பனையாளா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொது அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாமல் இல்லாமல் வருபவா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கெங்கவல்லியில்...

கெங்கவல்லியில் காய்கறி வாரச்சந்தை கடந்த 6 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.

கெங்கவல்லி பேரூராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமைதோறும் வாரச்சந்தை கூடும். ஆறு மாதங்களுக்கு பிறகு சந்தை கூடியதால் இப் பகுதியினா் மகிழ்ச்சி அடைந்தனா். இதேபோல் வீரகனூரில் திங்கள்கிழமைதோறும் கூடும் வாரசந்தை திங்கள்கிழமை கூடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT