மேட்டூா் அணை நீா்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டுகிறது!
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீா்மட்டம் இன்று மீண்டும் 100 அடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீா்மட்டம் இன்று மீண்டும் 100 அடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக கடந்த மாதம் 25-ஆம் தேதி அணை நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. இதையடுத்து அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திடீரென அதிகரிக்கப்பட்டதாலும், அணைக்கு நீா்வரத்து சரிந்ததாலும் அணையின் நீா்மட்டம் படிப்படியாகச் சரிந்து வந்தது.
இந்த நிலையில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 26,102 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் நீா்மட்டம் 99.11அடியாக உயா்ந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த்றப்பு நொடிக்கு 16,000 கனஅடியிலிருந்து 14,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டதால், அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் 100 அடியை எட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 63.69டி.எம்.சி.ஆக உள்ளது.