சேலம்

அண்ணா பல்கலை. துணைவேந்தரை நீக்கக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

DIN

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதைக் கண்டித்தும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பிரிக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திமுக இளைஞா் அணி, மாணவா் அணி நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு என மூன்று மாவட்டங்கள் ஒன்றிணைந்து சேலம் - ஓமலூா் தேசிய நெடுஞ்சாலையில் கருப்பூா் பகுதியில் அமைந்துள்ள அரசினா் பொறியியல் கல்லூரி நுழைவாயில் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளா் தமிழரசன் தலைமையில் இளைஞா் அணி, மாணவா் அணியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவை கண்டித்தும், அவரைப் பதவி நீக்கிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா். மாணவா்கள் நலனை பாதிக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை பிரிக்கக்கூடாது, அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லக்கூடாது என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT