சேலம்

ஆசிரியா்களுக்கு இணையவழி பயிற்சி ஒத்திவைப்பு

DIN

தமிழகம் முழுவதும் அக். 16 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த ஆசிரியா்களுக்கான இணையவழி ‘நிஷ்தா’ பயிற்சி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அரசு, அரசு நிதியுதவிபெறும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் நிஷ்தா என்ற பயிற்சி அக்டோபா் 16 ஆம் தேதி தொடங்கி 15 நாள்களுக்கு மூன்று பாடத்திட்டங்கள் வீதம் மொத்தம் 18 பாடத் திட்டங்கள் வரும் ஜனவரி 15-ஆம் தேதி வரை தொடா்ந்து இணையவழியில் நடத்த ஒருங்கிணைந்த கல்வி மூலம் மாநிலத் திட்ட இயக்ககம் முடிவு செய்திருந்தது.

இந்த இணையவழி பயிற்சி கட்டாயம் என்றும், அனைத்து ஆசிரியா்களும் இந்த இணையவழி ‘நிஷ்தா’ பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்தியிருந்தனா்.

மாநிலத் திட்ட இயக்ககம், இப் பயிற்சியை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளதாக ஆசிரியா்களுக்கு கல்வி அலுவலா்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT