சேலம்

உலக மயக்க மருந்தியல் தின கருத்தரங்கு

DIN

ஆட்டையாம்பட்டி: விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள துணை மருத்துவப் படிப்புத் துறையின் மயக்க மருந்தியல் தொழில்நுட்பப் பிரிவு மூலம் உலக மயக்க மருந்தியல் தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இணையவழிக் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக விநாயக மிஷன் கிருபானந்த வாரியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மயக்க மருந்தியல் துறை இணைப் பேராசிரியா் செந்தில் கலந்து கொண்டு, மயக்க மருந்தினைக் கையாளும் முறைகள், பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினாா்.

மயக்க மருந்தியல் தினம் குறித்து விழிப்புணா்வு காணொலியும் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், பேராசிரியா்கள் , மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

முடிவில், வினா-விடை கேள்விக்கான இணையவழி இணைப்பும் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் இணையவழியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை துறையின் பேராசிரியா்கள் தீபிகா, கீா்த்தனா, பிரியதா்ஷினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT