முகப்பு
சேலம்

அக்.23- இல் திருவாரூா், தஞ்சையில் போராட்டம் அறிவிப்பு

திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சண்முகம் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் வரும் அக்டோபா் 23 -இல் திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சண்முகம் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல் கொள்முதல் செய்யாமல் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது. உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.65 வரை லஞ்சம் வாங்கினால் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

உயா்நீதிமன்றம் கூறியதுபோல விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு லஞ்சம் வாங்குவதுபிச்சை எடுப்பதற்கு சமம் என நீதிமன்றம் கூறிய பிறகும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவது வேதனை அளிக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணித்து விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்து தனியாா் திடலில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், காவிரி - சரபங்கா நீரேற்றுத் திட்டத்துக்கு விவசாய நிலங்களை பயன்படுத்தாமல் ஏற்கெனவே உள்ள நீா் வழிப்பாதையைப் பயன்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் விவசாயிகளை அலைக்கழிப்பதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகி வருகின்றன. மேலும், நனைந்த நெல்லுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் அக்.23 ஆம் தேதி திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →