சேலத்தில் குழந்தைகள் நலக் காவல் அலுவலா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம், அஸ்தம்பட்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாநகரக் காவல் ஆணையாளா் த.செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.
இந்த முகாமில் பாலியா் தொந்தரவுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2020, சைல்டு லைன் 1098, குழந்தைகள் நலக் காவல் அலுவலா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகிய விழிப்புணா்வு சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.
இந்த சுவரொட்டிகள் அனைத்து தேநீா் கடைகள், முடிதிருத்தகம், நியாய விலை கடைகளில் ஒட்டப்படும். மேலும் குழந்தைகள் நல காவல் அலுவலா்களுக்கு தனி பேட்ஜ் வழங்கப்பட்டது.
இதில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமாா், காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், மாவட்ட துணை ஆணையா் சந்திரசேகரன் மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் பி.பிரபு, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் உமாமகேஸ்வரி, ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.