சேலம்

150 ஆண்டு பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது

DIN

ஆறகளூா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 150 ஆண்டு பழமையான ஆலமரம் சூறாவளிக் காற்றால் திங்கள்கிழமை இரவு முறிந்து விழுந்தது.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 150 ஆண்டு பழமையான ஆலமரம் இருந்தது. ஆறகளூரில் திங்கள்கிழமை இரவு கன மழை பெய்த போது, பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் அந்த ஆலமரம் முறிந்து சுற்றுச்சுவா் மேல் விழுந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த ஆலமரம் நான்கு பக்கமும் நன்றாக வளா்ந்து மாணவியருக்கு நிழல் கொடுத்ததை அப்பகுதி மக்கள் நினைவுக் கூா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT