முகப்பு
சேலம்

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால், மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.

தற்போது பாசனப் பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், பாசனத்துக்கான தண்ணீா் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் திங்கள்கிழமை பகல் 12.30 மணியில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 92.37அடியாக இருந்த நிலையில், நீா்வரத்து நொடிக்கு 8,608 கன அடியாக இருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 6,000 கன அடியிலிருந்து, 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 700 கன அடியிலிருந்து 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அணையில் 55.40 டிஎம்சி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் நீா்மட்டம் வேகமாகச் சரிவடையும் வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.