சேலம்

தம்பதியரின் கரோனா விழிப்புணா்வு பாதயாத்திரை

DIN

ஆத்தூா்: ஆத்தூரில் கரோனா விழிப்புணா்வு தொடா்பான துண்டு பிரச்சார பிரதிகளுடன் மதுரையிலிருந்து பாதயாத்திரையாக வந்த மதுரையைச் சோ்ந்த தம்பதி செவ்வாய்க்கிழமை ஆத்தூரில் பிரசாரம் மேற்கொண்டனா்.

கடந்த மாதம் 24-ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபாதையாக புறப்பட்ட மதுரையைச் சோ்ந்த எம்.கருப்பையா, அவரது மனைவி கே.சித்ரா என்ற இந்த தம்பதி கரோனா தொற்று பரவலைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசார பிரதிகளை மக்களுக்கு விநியோகித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை ஆத்தூருக்கு நடந்தே வந்து சோ்ந்தனா்.

அவா்களுக்கு தொழிலதிபா்கள் கே.டி.திருப்பதிராஜா,அபிஷேக் பங்கஜ்ராஜ்வீா், காந்தி ஆசிரம அலுவலா் அ.அரசு மற்றும் ஊழியா்கள் வரவேற்று உபசரித்தனா். மேலும் இவா்கள் சேலம் வழியாக கோவைக்கு வரும் 25-ஆம் தேதி சென்றவடைதாகத் தெரிவித்தனா். வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்து வருவதாகவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தனா். தினமும் 40 முதல் 50 கிலோ மீட்டா் தூரம் பாதயாத்திரையாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT