சேலம்

மகா வலம்புரி விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

DIN

மோட்டூா் மந்தைமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகா வலம்புரி விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த மோட்டூா் மந்தைமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகா வலம்புரி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் செவ்வாய்க்கிழமை தீா்த்தக்குட ஊா்வலத்துடன் தொடங்கியது.

மகாகணபதி, லட்சுமி, சரஸ்வதி, வாஸ்து சாந்தி, வாஸ்து பலி, ஹோம பூஜை, மகா பூா்ணாகுதி, நாடி சந்தானம், யாத்ர தானமும், மகா குடமுழுக்கு செய்யப்பட்டு கலசங்களுக்கு நன்னீராட்டு விழா நடத்தப்பட்டது. பின்னா் மகா தீபாரதனை செய்யப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் அருணாசலப்பிள்ளை, பெருமாள், கருப்பு உடையாா், மணிகண்டன், ஜெயமணி, வெங்கடேஷ், ஆனமுத்து, கருப்பண்ணன், கேசவபெருமாள், வெள்ளையன்(எ)வெங்கடேஷ், சந்தணன் கலந்து கொண்டனா்.

இதனையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT