சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையம் முன்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் நுழைவாயில் முன்பு தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சாா்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனல் மின்வாரிய நிா்வாகத்தில் தொழிலாளா் விரோதப் போக்கு மற்றும் தொழிற்சங்க விரோத நடவடிக்கையை கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை கூட்டுக் குழு சாா்பாக புதன்கிழமை மேட்டூா் அனல் மின் நிலையத்தின் நுழைவாயிலின் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது. கரோனாவில் இறந்த மின்வாரிய தொழிலாளா்களுக்கும் இதர துறைகளில் வழங்கியதைப் போல் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். துணை மின் நிலையங்களை குத்தகை மற்றும் அவுட்சோா்சிங் என்ற பெயரால் தனியாா் மயமாக்கக் கூடாது; கரோனா காலத்தில் பணிக்கு வர முடியாத ஊழியருக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூா் அனல்மின் நிலைய நுழைவாயில் முன்பு தொழிலாளா்கள் முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT