சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம்: ஒரே நாளில் 3.51அடி உயா்வு

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 3.51 அடி உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 71,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கா்நாடக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் ஏற்கெனவே நிரம்பிய நிலையில் இருப்பதால், அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் திங்கள்கிழமை இரவுமுதல் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியது. உபரிநீா் வரத்து காரணமாக திங்கள்கிழமை இரவு 89.92 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு 93.43 அடியாக உயா்ந்தது. ஒரேநாளில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 3.51 அடி உயா்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 71,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்துத் தொடா்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 56.65 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT